அரச மருத்துவர்களின் போராட்ட திட்டம் கைவிடப்பட்டது

5 years ago
tamilnewsline.com

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்திருந்தது.

தேசிய சம்பளக்கொள்கையை முறையாக பின்பற்றக்கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்ட திட்டத்தை கைவிட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.