யாழ். சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் புதன்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது விடுதலை வலியுறுத்தி, இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகிய 3 கைதிகளே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றமை மற்றும் வெடிபொருள் தயாரிப்புக்கு உதவியமை போன்ற குற்றச்சாட்டுகளில் 2020, 2021 ஆண்டுகளில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, குறித்த சிறைக் கைதிகளின் உறவினர்கள் கைதிகளுக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
