Aivarree

அம்பிகாவுக்கு எதிரான வெளியுறவுத்துறை அமைச்சின் அறிக்கைக்கு பெரும் கண்டனம்.

FILE PHOTO

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய உப பாராளுமன்றக் குழுவில், முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர், சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்திருந்த கருத்துகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது.

வெளிவிகார அமைச்சு இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இலங்கை குறித்து போலியான விம்பத்தை ஏற்படுத்த அம்பிகா முயல்வதாக குற்றஞ்சுமத்தி இருந்தது.

எனினும் வெளிவிவகார அமைச்சின் இந்த செயலுக்கு, 161 தனிநபர்கள் மற்றும் 47 அமைப்புகள் கூட்டிணைந்து கண்டனம் தெரிவித்துள்ளன.

மனித உரிமைகள் சார்ந்த சுயாதீன செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடு அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version