tamilnewsline

அப்பிலைம் திராட்சையையும் உண்டு இருளில் இருப்போமா?/அமைச்சர் கம்மன்பில

இலங்கை அரசாங்கம் இறக்குமதியின் போது எவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என அமைச்சர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு மொத்தமாக 21 பில்லியன் டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.

அதில் 2.8 பில்லியன் டொலர்கள் மட்டுமே எரிபொருள் இறக்குமதிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதும் அப்பில், திராட்சை போன்றவற்றை இறக்குதி செய்வதற்கு அதிகபடியான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.


ஆனால் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய போதிய அளவு டொலர் இல்லை என்றும் நாட்டில் நிலவும் சக்திவள பிரச்சினைக்கு இதுவே மூலக்காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version