tamilnewsline

அபுதாபி இளவரசருடன் ஜனாதிபதி தொலைபேசி உரையாடல்

அபுதாபி முடிக்குரிய இளவரசரும் ஐக்கிய அரபு ராச்சியத்தின் பாதுகாப்பு படையின் உதவி உயர் கட்டளைத் தளபதியுமான ஷேக் மொஹமட் பின் சயாட் அல் நஹ்யான் உடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசியில் உரையாடியுள்ளார்.


இதன்போது பொதுவான விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக, எமிரேட்ஸ் நியுஸ் ஏஜன்சி செய்தி வெளியிட்டுள்ளது.


எனினும் விரிவான தகவல் வெளியிடப்படவில்லை.


அண்மையில் ரஷ்யாவிடம் இருந்து இலங்கை 300 மில்லியன் டொலர்களை கடனுதவியாக கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version