Aivarree

அத்தியாவசிய பொருள் நெருக்கடி / ஜனாதிபதியின் உத்தரவு

FILE PHOTO

சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பது தொடர்பிலான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் திங்களன்று இடம்பெற்றபோது ஜனாதிபதி விடுத்த முக்கிய அறிவுறுத்தல்கள்.


சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.


உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்றை நியமித்தார்.


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு இன்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.


தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் அன்றி, குறுகிய எண்ணங்களுடன் அதிகப்படியான பொருட்களை இறக்குமதி செய்வதற்கோ அல்லது பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கோ இடமளிக்கக் கூடாது, என்றார்.

#PMD

Exit mobile version