எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி மிதப்பு முறையில் தீர்மானிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை எப்படி நிர்ணயிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அடுத்த வாரத்துக்குள் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
