Aivarree

அதிரடியில் நரேந்திர மோடி | அதிர்ச்சியில் இலங்கை அதிகாரிகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் 30ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வருகிறார்.

அவர் இந்தியாவில் இருந்து நேரடியாக யாழ்ப்பாணம் பலாலியில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு வருவார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் நிதி உதவியுடன் பலாலி விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.

எனினும் அது உரிய பராமரிப்பு இல்லாமல் தற்பொழுது ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் நேரடியாக பலாலிக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், விமான நிலையத்தை அவசர அவசரமாக சீரமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அதிகாரிகள் உள்ளாகியுள்ளனர்.

Exit mobile version