Aivarree

அதிபர் நியமனம்/ விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தில் விண்ணப்பதாரிகளால் செல்வாக்கு செலுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய குறித்த அதிபர்கள் நியமனத்துக்கான தேர்வுகளின் போது, விண்ணப்பதாரிகளால் கல்விச் சேவை ஆணைக்குழுவுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு உள்ளனவா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

Exit mobile version