Aivarree

அஜித் உடன் இணையும் தபு

அஜித் உடன் இணையும் தபு

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் – எச்.வினோத் – போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாகவும் இணைகின்றனர்.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’.

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தபடம் வெளியாகும் திகதி பிற்போடப்பட்டுள்ளது.

தற்போது புதிய திரைப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Exit mobile version