அஜித்தின் அடுத்த பட வேலைகள் மார்ச்சில் ஆரம்பம்

5 years ago
tamilnewsline.com

‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ படத்திற்குப் பிறகு, நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் எச் வினோத்துடன் கைகோர்க்கிறார் என்ற செய்தி அறிந்ததே.


அஜித்தின் 61வது படமான இதனை போனி கபூர் தயாரிக்கிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மார்ச் மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. 


இதற்காகச் சென்னையில் பிரமாண்டமான அரங்கு ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு ஏகே 61 என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அஜித், போனி கப்பூர் மற்றும் எச். வினோத் ஆகியோர் அடுத்தடுத்து இணையும் மூன்றாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.