Aivarree

ஃப்ளோரிடா படகு விபத்து ஃ மீட்பு பணிகள் தொடர்கின்றன

File boat

ஃப்ளோரிடா கடற்பரப்பில், படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல்போன 39 பேரைத் தேடும் பணிகளில் அமெரிக்க கடலோர பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் படகின் மேற்பகுதியில் அமர்ந்தவாறு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒருவரை அவதானித்த கடலோர பாதுகாப்புத் தரப்பினர், அவரைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

குறித்த படகு பயணமானது, மனிதக் கடத்தலின் ஒரு முயற்சியாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படகில் பயணித்த நிலையில் மீட்கப்பட்டவர் வழங்கிய தகவலின்படி, அதில் பயணித்த எவரும் உயிர்காப்பு அங்கியை அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கப்பல்கள் மற்றும் உலங்குவிமானங்கள் மூலம், அவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Exit mobile version