ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியும் – ஹபாயா பிரச்சினையும் / சாணக்கியன் விளக்கம்.

4 years ago
Sri Lanka
(228 views)
aivarree.com

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஹபாயாவுடன் முஸ்லிம் ஆசிரியர்கள் பிரவேசிப்பது குறித்து மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. 


ஏற்கனவே இதுதொடர்பான நீதிமன்ற வழக்கில் இருதரப்பும் சமரசம் அடைந்த நிலையில், குறித்த ஆசிரியர் மீளப் பாடசாலைக்கு ஹபாயாவுடன் சென்ற போது தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதுதொடர்பாக பக்கச்சார்பற்ற வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் இதனை அரசியலுக்காகப் பயன்படுத்தக்கூடாது எனவும் இரு சமூக இணக்கப்பாட்டுடன் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.