விருதிமன் சஹாவுக்கு அச்சுறுத்தல் – கங்குலியிடம் ரவி சாஷ்த்திரி கோரிக்கை

4 years ago
SPORTS
(61 views)
aivarree.com

இந்திய கிரிக்கட் வீரர் விருதிமான் சஹாவுக்கு அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக ஊடகவியலாளர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வட்சப் கலந்துரையாடல் ஒன்றை விரிதிமன் சாஹா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து குறித்த விடயத்தில் விரிதிமன் சஹாவுக்கு முன்னாள் வீரர் விரேந்திர செவாக் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்த விசாரணையை முன்னெடுக்கவும் நடவடிக்கையை எடுக்கவும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலி முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஷ்த்திரி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.