Aivarree

விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் கொழும்பில் தடுத்து வைப்பு

file photo

அண்மையில் யாழ்ப்பாணம் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட 56 தமிழக மீனவர்கள் கொழும்பில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்படவுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தமைக்காக கைது செய்யப்பட்ட அவர்கள் கடந்த ஜனவரி 25ம் திகதி விடுவிக்கப்பட்டனர்.

அவர்களில் சிலருக்கு கொவிட் தொற்றி இருந்ததால், இயக்கச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த நிலையில் அவர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்படுகின்றனர்.

விரைவில் அவர்கள் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் உதவியுடன் இந்தியாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவர்.

Exit mobile version