வாள்வெட்டு வன்முறை களில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகயிருந்த இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடையவரே இன்று கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
“கோப்பாய், யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் அவருக்கு தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
