tamilnewsline

வவுனியா ரயில் சேவை 5 மாதங்களுக்கு இல்லை

வவுனியாவுக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான ரயில் சேவை ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

ரயில் பாதை திணைக்களத்தின் பொது முகாமையாளர் இதனை அறிவித்துள்ளார்.

இந்த நகரங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாள திருத்தப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருத்தப் பணிகள் நிறைவடைந்ததும் ஐந்து மாதங்களின் பின்னர் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version