tamilnewsline

வவுனியாவில் விபத்து / பெண் பரிதாபமாக பலி

வவுனியாவில் கனகராயன்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கனகராயன்குளம் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த தந்தையும் மகளும் அவ்வீதியால் வந்துகொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அதில் ஏறமுற்பட்டுள்ளனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து குறித்த இருவரையும் மோதியுள்ளது.

விபத்தில் சிவசுப்பிரமணியம் சிந்துஜா 33 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version