நாட்டில் எரிபொருட்களின் விலையை தீர்மானிக்கும் விலை சூத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த விலை சூத்திரத்தின் வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த வரைவு எதிர்வரும் 21ஆம் திகதி அமைச்சரவை பத்திரமாக அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறான ஒரு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தி இருந்தார்.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்த உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
