லிந்துலை தீவிபத்தில் ஒருவர் பலி / எரிவாயு வெடிப்பா காரணம்?

4 years ago
Sri Lanka
(109 views)
aivarree.com

லிந்துலை நகரில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் சென்கிளயார் தோட்டத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார்.

லிந்துலை நகரில் உள்ள உணவகம் ஒன்றின் சமையலறையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எரிவாயு அடுப்பு வெடிப்பினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், சமையலில் ஈடுபடும் போது அவரது ஆடையில் தீப்பற்றியமையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.