ரஷ்ய – உக்ரைன் யுத்தம் ஆரம்பித்து விட்டதா? / 2 வீரர்கள் பலி

4 years ago
World
(102 views)
aivarree.com

எறிகணை வீச்சு தாக்குதல் ஒன்றில் 2 உக்ரைன் வீரர்கள் பலியானதாக AFP தகவல் வெளியிட்டுள்ளது.

தாக்குதல் எந்த தரப்பால் மேற்கொள்ளப்பட்டது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.

உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் ரஷ்யா, எல்லையில் படைகளை குவித்திருப்பதாக மேற்குலக நாடுகள் கூறுகின்றன.

ரஷ்யா இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

எனினும் உக்ரைன் பக்கமாக இருந்து திங்கட்கிழமை எறிகணை வீச்சு நடத்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.