ரஷ்யாவின் கொடூரம் |அமெரிக்க ஊடகவியலாளரும் மேலும் 36 பேர் பலி

4 years ago
World
(114 views)
aivarree.com

உக்ரைன் தலைநகர் கியவ் அருகிலுள்ள இர்ப்பின் பிராந்தியத்தில், அமெரிக்க ஊடகவியலாளரும், ஆவண பட இயக்குனருமான ப்ரெண்ட் ரெனோவட் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கான செய்தியாளராக அவர் இருந்தார்.

எனினும் அவர் கொல்லப்பட்ட போது தங்களுக்கான பணியில் ஈடுபட்டிருக்கவில்லை என நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை போலாந்து எல்லையில் உள்ள இராணுவ படைத்தளம் ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இதில் குறைந்தபட்சம் 35 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.