Aivarree

யாழில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி

மின்சாரம் தாக்கி யாழ்ப்பாணம் – புத்தூரில் 2 பேர் பலியாகினர்.

59 வயதான மாசிலாமணி குகபிரகாசம், 55 வயதான சிவபிரகாசம் சுகுனா ஆகிய தம்பதியினரே சம்பவத்தில் பலியானதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தை அச்சுவெலி காவல்துறையினர் அய்வரி செய்திகளுக்கு உறுதிபடுத்தினர்.

Update-1 நீர் பம்பிக்கு பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் இருந்து கிணற்று நீரில் மின்சாரம் கசிந்திருந்த நிலையில், மனைவி அதில் சிக்குண்டார்.

மனைவியை காப்பாற்ற சென்ற போது, கணவனும் மின்சாரம் தாக்கி பலியானார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Exit mobile version