Aivarree

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை / யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் மூதாட்டியை அடித்துக்கொலை செய்து அவரது நகைகள் கொள்ளையிடப்பட்டன.

அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் முதிய பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் அப்பெண் தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவரே அவரை கொலை செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர் தப்பிச் சென்றார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version