tamilnewsline

முஸ்லிம் நபரின் காணியில் முளைத்த புத்தர் சிலை | அம்பாறையில் பதட்டம்

அம்பாறை – அட்டாளைச்சேனை – பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், சிங்கள இளைஞர்கள் முயற்சி எடுத்தனர்.

அந்த காணியில் புராதன சின்னங்கள் உள்ளன என போலியான பரப்புரை மேற்கொண்டு காணி சுவீகரிப்பு முயற்சி இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக அங்கு பதட்டம் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் பிரவேசித்து, இந்த பிரச்சினையை அரசாங்க அதிபரின் மத்தியஸ்த்ததுடன் பேசி தீர்மானிப்பதென்று முடிவு செய்தனர்.

இதனை அடுத்து பிக்குகளும் இளைஞர்களும் அங்கிருந்து அகன்றனர்.

Exit mobile version