மீனவர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுங்கள் / மு.க. ஸ்டாலின் மோடிக்கு வலியுறுத்தல்

4 years ago
World
(44 views)
aivarree.com

ஞாயிற்றுக்கிழமை தமிழக மீனவர்கள் சிலர் இலங்கை கடற்பரப்பில் கைதானதும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.


கிளிநொச்சி – இரணைதீவுக்கு அருகில் 2 படகுகளில் 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.


கடந்த இரண்டு வாரக் காலப்பகுதியில் இவ்வாறு 41 மீனவர்கள் 6 படகுகளுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார்.


இவ்வாறான கைதுகளைத் தடுப்பதற்கு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணுமாறும் அவர் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.