இலங்கைக்கு எதிரான 4வது 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கட்களால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தேர்வு செய்தமையால் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் பெத்தும் நிசங்க மாத்திரம் 46 ஓட்டங்களை அதிகமாக பெற்றார்.
தொடர்ந்து 140 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்ரேலிய அணி 18வது ஓவரின் முதலாவது பந்து வீசப்பட்ட நிலையில் 143 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவு செய்தது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் க்ளென் மெக்ஸ்வெல் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களை பெற்றார்.
