மின் விநியோக தடையில் மாற்றம்

4 years ago
Sri Lanka
(207 views)
aivarree.com

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் மின் விநியோக தடை அமலாக்கப்பட்டு வருகிறது.

எனினும் அறிவிக்கப்பட்டதன் படி மின் விநியோக தடை அமல் ஆகாமல் போகலாம் அல்லது அமுலாகும் காலம் குறைக்கப்படலாம் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தடையை குறைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எரிபொருள் கையிருப்புக்கு அமைய நாளாந்தம் மின் தடையானது சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு அல்லது முற்றாக மின் தடை இல்லாமல் செய்யப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.