tamilnewsline

மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய முயற்சி

பொதுப்போக்குவரத்துக்காக 100 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய முயற்சிக்கப்படுகிறது.

இதற்கான இயலுமை தொடர்பிலும் ஜனாதிபதி தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையின் படி, போக்குவரத்து நிலைமைகள் சம்பந்தமாக திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, எரிபொருள் விலை மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டு, மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இறக்குமதி செய்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

Exit mobile version