Aivarree

மலையகத்தில் விசேட ரயில் சேவை

மலையகத்தில் கண்டியில் இருந்து பதுளை, எல்ல பிரதேசம் வரை விசேட சுற்றுலா ரயில் சேவையை இயக்குவதற்கு ரயில்தட திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கண்டியில் இருந்து காலை 7.20 குப் புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2.20க்கு தெமோதரையை சென்றடையும்.

இந்த ரயில் மலையகத்தில் பேராதனை, நாவலப்பிட்டி, ஆடம்ஸ் பீக், கிரேட் வெஸ்டர்ன், நானு ஓயா, எல்ஜின் நீர்வீழ்ச்சி, பட்டிப்பளை, உச்சி மட்டம் (Summit Level, Pattipola), ஒஹியா சுரங்க எண் 18, ஓஹியா, இதழ்கஸ்ஹின்ன, விண்ட்ஸ்பிரேக், ஹப்புத்தளை, கித்ல் எல்ல, 9 வளைவுகள் பாலம் (Nine arch bridge – Demodara) மற்றும் பிற சுற்றுலா இடங்களில் மாத்திரம் நிறுத்தப்படும்.

இந்த ரயில் தெமோதரயில் இருந்து மாலை 3.40க்கு புறப்பட்டு இரவு 9.35க்கு கண்டியை சென்றடையும்.

Exit mobile version