மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு சலுகை விலையில் கோதுமை – அமைச்சரவை முடிவு

5 years ago
tamilnewsline.com

பெருந்தோட்டப் பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 115,867 குடும்பங்களுக்கு சலுகை விலையில் கோதுமை மா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதன்படி அவர்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமையை 80 ரூபாய் என்ற சலுகை விலையில் வழங்க தீர்மானித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் கோதுமை மா வழங்குவது அவர்களுக்கு போதுமான நிவாரணம் அல்லவென பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்படுகிறது.