Aivarree

மன்னிப்பு கோர மாட்டேன் / ரஞ்சன்

தாம் மன்னிப்பு கோரப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதிலும் பேச அனுமதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

எனினும், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சைகை மொழியில் கையையும், தலையும் பாவித்து பதிலளித்தார்.

“வாழ்த்துக்கள், நான் நலம். பேசுவதற்கு தடை. நான் மன்னிப்பு கேட்கவில்லை,” என அவர் கூறிச் சென்றார்.

Exit mobile version