மனோவும் – பிரபாவும் மீண்டும் இணையும் சாத்தியம்.

5 years ago
Sri Lanka
(169 views)
aivarree.com

முன்னாள் அமைச்சர் மனோகணேஷனும் அவரது சகோதரர் பிரபாகணேஷனும் மீண்டும் இணையவுள்ளனர்.

அவர்கள் இருவருடனும் தொடர்புடைய முக்கியஸ்த்தர் ஒருவர் இந்த தகவலை எமக்கு வழங்கினார்.

இதுதொடர்பாக பல்வேறு சந்திப்புகள் இருவருக்கும் இடையில் இடம்பெற்றுள்ளன.

2010 பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் வெற்றிபெற்ற பிரபாகணேஷன், மனோவின் உத்தரவை மீறி மகிந்தவுடன் இணைந்ததை அடுத்து, அவர்களுக்கு இடையில் பிரிவு ஏற்பட்டது.

தற்போது மனோவின் மகன் அரசியலுக்கு வர மறுத்துவரும் நிலையில், கட்சியை நடத்திச் செல்லும் வகையில் மனோ – பிரபா மீளிணைவதாக கூறப்படுகிறது.