tamilnewsline

மண்சரிவால் பலர் பலி – பிரேசிலில் அவலம்

Reuters

பிரேசிலின் பெட்ரோபோலிஸ் நகரில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தினால் குறைந்தது 94 பேர் உயிரிழந்தனர்.


ரியோ டி ஜெனிரோவின் வடக்கே மலைப்பகுதியில் அமைந்துள்ள குறித்த நகரம், தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.


நகரின் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மலைப்பகுதிகளில் உள்ள வீடுகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.


அங்கு தற்போது அவசரக்கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 
அதேநேரம் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 24 பேர் வரையில் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version