Aivarree

மட்டுவில் உணவு ஒவ்வாமை| பாதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை 64ஆக உயர்வு

மட்டக்களப்பு – வடமுனை – ஊத்துச்சேனை பகுதியில் உள்ள வீரநகர் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டு வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளது.

மதிய உணவாக பாடசாலையில் வழங்கப்பட்ட சோறும், சோயாமீட் கறியும் ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் பாடசாலையில் இருந்து வீடு சென்ற மாணவர்கள் பலர் மயங்கி விழுந்த நிலையில் பாடசாலையின் அனைத்து மாணவர்களும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வெலிகந்தை வைத்தியசாலையை அய்வரி செய்திகள் குழு தொடர்பு கொண்டு கேட்டபோது, அனைத்து மாணவர்களும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version