Aivarree

மடகஸ்காரில் மனிதாபிமான நெருக்கடி

பட்சிராய் என்ற சூறாவளி திங்கள் அன்று மடகஸ்காரை தாக்கியது.


இதில் 20 பேர் கொல்லப்பட்டதுடன், 50,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மடகஸ்காரில் இந்த சூறாவளி விவசாய உற்பத்திகளையும் சேதப்படுத்தியுள்ளது.


இதனால் அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி உருவாகி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


மடகஸ்காரில் 77 சதவீதமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version