tamilnewsline

மகாராணி எலிசபத்துக்கும் கொவிட்

பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபத்துக்கு கொவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அவர் “லேசான குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை” வெளிப்படுத்திய போதும், வரும் வாரத்தில் “மிதமான கடமைகளை” தொடர எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

95 வயதான ராணி பூரண தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்.

இங்கிலாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவரான 2ஆம் எலிசபத், பெப்ரவரி 6 ஆம் திகதி தனது 70 ஆண்டுகால ஆட்சியை பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version