மகளிர் கிரிக்கட் உலகக்கிண்ணம் திட்டமிட்டபடி இடம்பெறும் – நியூசிலாந்து

4 years ago
SPORTS
(75 views)
aivarree.com

நியூசிலாந்தில் மேலும் கொவிட் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், மகளிர் உலகக் கிண்ணத் தொடர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திட்டமிட்டபடி நடைபெறும்.


ஓமிக்ரொன் திரிபு பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட உள்ளன.


போட்டிக்காக நாட்டிற்குள் நுழையும் வீரர்கள் உட்பட அனைவரும் ஏற்கனவே 10 நாட்கள் தனிமைப்படுத்தலை எதிர்கொண்டனர்.


நாட்டை ‘சிவப்பு’ எச்சரிக்கை அளவிலான கட்டுப்பாடுகளின் கீழ் வைத்துள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது திருமணத்தை ரத்து செய்தார்.