Aivarree

பேருந்து கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.


இதற்கமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக குறித்த கட்டணம் 17 ரூபாவாக காணப்பட்டது.


எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அதிகரிப்பு அமுலுக்கு வருகிறது.

Exit mobile version