Aivarree

பேரறிவாளனுக்கு 32 ஆண்டுகளின் பின்னர் பிணை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது.

பேரறிவாளனைச் சிறையில் இருந்து விடுவிக்க ஏற்கனவே விடுத்த உத்தரவுகுறித்து தமிழக ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை. 

எனவே அவருக்குப் பிணை வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. 

இந்த வழக்கில் 19 வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு 1999 மே மாதம்மரண தண்டனை விதிக்கப்பட்டு, 2014இல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 

இந்த தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட 8 வோல்ட் மின்கலம் ஒன்றைவாங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

Exit mobile version