tamilnewsline

பேய் குரங்கும் புதிதாக அடையாளம் காணப்பட்ட 224 உயிரினங்களும்

‘உலக வனவிலங்கு நிதியம்’ பாதுகாப்புக் குழு, மீகாங் பகுதியில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 224 உயிரினங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அவற்றில் கண்களைச் சுற்றி ‘பேய்’ வெள்ளை வட்டங்கள் கொண்ட குரங்கு, தவளைகள்; மற்றும் சதைப்பற்றுள்ள மூங்கில் இனங்கள் என்பனவும் அடங்கும்.

அப்பகுதியில் உள்ள உலகின் மிக ஆபத்தான உயிரினங்கள் அடையாளம் காணப்படுவதற்கு முன்பே அழிவை எதிர்கொள்கின்றன.

மீகாங் பிராந்தியம் கம்போடியா, லாவோஸ், மியான்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பெரும் பிரதேசமாகும்.

Exit mobile version