Aivarree

புட்டினை விமர்சித்த ரஷ்ய மொடல் அழகி சடலமாக மீட்பு

புட்டினை விமர்சித்த ரஷ்ய மொடல் அழகி ஒருவர் பயணப்பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிரெட்டா வெட்லர் என்றழைக்கப்படும் 23 வயதான குறித்த பெண்,கடந்த ஆண்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் புட்டினை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், தீடீரென அவர் மாயமானதுடன், அண்மையில் சாலையோரத்திலிருந்த பயணப்பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தாமே அவரை கொலை செய்ததாகக் கூறி அவரது ஆண் நண்பர் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

அதற்கமைய, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதால் கிரேட்டாவை கொலை செய்ததாகவும், சடலத்துடன் 3 நாட்கள் சுற்றித்திரிந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Exit mobile version