tamilnewsline

பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த பரீட்சையை இலக்காகக் கொண்ட பிரத்தியேக வகுப்புகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, பரீட்சையை இலக்காக கொண்ட கருத்தரங்குகள், வினாத்தாள்களை அச்சிட்டு பகிர்ந்தளித்தல், விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்கு விதிகளை மீறுவோர் தொடர்பில் காவல் நிலையத்தில் அல்லது பரீட்சைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version