பாடசாலை ஆரம்பிக்கப்படும் விதம் / ஆசிரியர் சங்கத்துக்கு சந்தேகம்

4 years ago
Sri Lanka
(122 views)
aivarree.com

பாடசாலை மீண்டும் குழுக்களாக நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்து அறிவித்துள்ளது.


இதன்படி வகுப்பொன்றின் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 20 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வாரம் பாடசாலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஆனால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதற்கு முன்னர் அதிக கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும், அனைத்து மாணவர்களும் ஒருசேர அழைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.


தற்போது குழுக்களாக பிரித்து அழைக்கப்படுகின்றமைக்கான காரணத்தை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.