Aivarree

பல இடங்களில் கடும் மழை

File_Photo

அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான மழை பெய்யக்கூடும்.

ஊவா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Exit mobile version