பயண கட்டுப்பாடுகள்/இராணுவத்தளபதியின் விளக்கம்

4 years ago
Sri Lanka
(100 views)
aivarree.com

நாட்டில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடம் வினவப்பட்டது.

இதன் போது, சகலரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கூறினார்.

இதேவேளை நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் எந்த திட்டமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

தடுப்பூசி மற்றும் முகக்கவசங்களை பயன்படுத்துவதன் ஊடாக நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்

இராணுவத்தளபதி தற்போது கொவிட் கட்டுப்பாடு செயலணியின் தலைவராக பதவி வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Reported by
Editorial Reporter