tamilnewsline

பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தம் – இலங்கை அரசு முன்வைப்பு

File Photo

பயங்கரவாத தடை சட்டத்தின் திருத்தங்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போதிருக்கின்ற சட்டத்தின்படி தடுத்து வைத்தல் உத்தரவின் கீழ் உள்ள 18 மாத தடுப்புக் காவல் காலம், 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவரை சட்டத்தரணிகள் அணுகுவதற்கும், சந்தேகநபர் தமது உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு நீதவான் ஒருவர் விஜயம் செய்து, அவர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான வாய்ப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும் சந்தேகநபர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்கான திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version