tamilnewsline

பசில் ராஜபக்ஷவின் கூற்றை மதிப்பிழக்கச் செய்த மத்திய வங்கி ஆளுனர் 

சர்வதேச நாணய நிதியத்திடம் “தொழில்நுட்ப ஆலோசனை கோரி தகவல் அனுப்பி இருப்பதாக” நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று அறிவித்திருந்தார்.

ஆனால் இந்த அறிவிப்பானது “நிதியமைச்சில் உள்ள புதிய பேரண்ட பொருளாதார பிரிவின் இயலுமை விருத்திக்கான தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனையைப்பெற்றுக் கொள்வதற்கான வழமையான செயற்பாடே தவிர பிறிதொன்றும் (முக்கியமான) இல்லை” என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவின் இந்த கூற்றானது, இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடி பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் அதனை முறியடிக்கும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநரின் இந்த கருத்து அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது.

Exit mobile version