நுவரெலியா விளையாட்டரங்கு நிர்மாண பணி கைவிடல்/ ரூபாய் 60 கோடி நட்டம்

4 years ago
Sri Lanka
(214 views)
aivarree.com

நுவரெலியா விளையாட்டு அரங்கு நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதால், 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டமை தெரியவந்துள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் விளையாட்டு அமைச்சுக்கு சொந்தமான 34 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்த விளையாட்டரங்கு வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் ஒப்பந்தப் பெறுமதியான 75,75,528,700 யூரோவில் 70 சத வீதத்தை ஐக்கிய இராச்சியத்தின் ஏற்றுமதி நிதிக் கூட்டுத்தாபனத்திடமும் மீதி 30 சத வீதத்தை மக்கள் வங்கியிடமும் பெறுவதற்கான கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன்படி கடன் ஏற்பாட்டு நிதியாக அந்த வங்கிக்கு 5 கோடி ரூபாய் (51,047,021) வழங்கப்பட்டதோடு, உபகரணங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக 2019ல் 53,551,631 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

#லங்காதீப