பொரளை அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ளனர்.
அவர்கள் மூவரையும் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
